Activity - 1 Date: 01.09.2026 Day: Tuesday “செந்தமிழ்ச் சோலை வாகை மன்றம் 2026-2027” • இன்று நடைபெற்ற செந்தமிழ்ச்சோலை வாகை மன்றம் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடந்தது. அதில் மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். • தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் உறுதிமொழியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கந்தன் பாமாலை, நல்வரவு விருந்து, செந்தமிழ் தேன்மழை, திருக்குறள், “உணவே மருந்து” உரையாடல், கலைக்கூத்து, கும்மி நடனம், சிலம்பாட்டம், ஆடற் கலை விருந்து, வண்ணமயமான நடனம், வேடமணிந்து நடித்தல், மற்றும் தமிழ்த் தத்துவப் பாடல் ஆகியவை சிறப்பாக இடம்பெற்றன. • இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் தங்களது படைப்பாற்றல், நடிப்புத் திறன், பேச்சுத் திறன், நடனத் திறன் மற்றும் தமிழ் மொழித்திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும் சிறப்பான நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. • தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறப்பை எடுத்துரைத்த இந்நிகழ்வு மாணவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இனிய நினைவாக அமைந்தது.
2023 senthil matric school Dharmapuri. all rights reserved. designed by aatmia.